முக்கிய செய்திகள்:
பாதிரியார் அலெக்சை மீட்க நடவடிக்கை எடுங்கள்: கனிமொழி வலியுறுத்தல்

டெல்லி மேல்– சபையில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:–

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈராக்கில் சிக்கியுள்ள இந்தியர்கள் தங்கள் சொந்த செலவில் தாயகம் திரும்பவேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.ஈராக்கில் இருக்கும் ஏராளமான இந்திய தொழிலாளர்களின் கடவுச் சீட்டுகள் (பாஸ்போர்ட்டுகள்) அவர்களது முதலாளிகள் வசம் உள்ளன.

மேலும் அவர்கள் உடனடியாக திரும்பி வருவதற்குரிய பொருளாதார வசதியும் இருக்காது. இந்நிலையில் அவரவர் சொந்த முயற்சியில் தாயகம் திரும்பவேண்டும் என்று அரசு சொல்வது எந்த நாட்டில் இருக்கும் இந்தியத் தொழிலாளர்களுக்கும் முற்றிலும் சாத்தியமற்றது.ஈராக்கில் அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய ஆயுததாரிகளால் பிடித்துச் செல்லப்பட்ட 41 இந்தியர்களின் நிலை என்னவானது என்பது பற்றி அரசாங்கம் விளக்க வேண்டும்.

வெளிநாடுகளில் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளமானவை. அவர்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிப்படி வேலை அளிக்கப்படுவதில்லை.இதையெல்லாம் தடுத்திட வெளிநாட்டுக்கு செல்வோர் அனைவரையும் சட்டபூர்வமாக அனுப்பிட, அங்கு அவர்களின் உரிமைகள் காக்கப்பட்ட நீண்ட கால செயல்திட்டத்தை அரசு முன்னெடுக்கவேண்டும். இதன் முக்கிய நடவடிக்கையாக வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் சட்டவிரோத முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்லும் முறையை ஒழிக்கவேண்டும்.

ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளால் ஜூன் 2–ந்தேதி தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியாரான அலெக்சிஸ் பிரேம்குமார் கடத்தப்பட்டார். அரசு அவரை மீட்க முயற்சிகள் எடுத்துவருவதாகச் மத்திய அரசு சொன்னது. ஆனால் இரண்டு மாதங்கள் முடிந்த பின்னும் இன்னும் பாதிரியார் பற்றி எந்த தகவலும் அரசிடமிருந்து கிடைக்கவிலை. அவர் நிலைமை என்ன? அவரை மீட்க அரசு என்ன நட வடிக்கை எடுத்து வருகிறது?’’ என்றார்.

இதற்கு மத்திய வெளி விவகாரத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பதில் அளிக்கையில் நாங்கள் ஆப்கன் அதிகாரிகளுடன் இந்த விவகாரம் தொடர்பாக தொடர்பில் இருக்கிறோம். அவர் உயிரோடுதான் இருக்கிறார். அவரை விரைவில் மீட்க எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்