முக்கிய செய்திகள்:
மோடிக்கு விசா வழங்குவோம்: கெர்ரி பேட்டி

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி இன்று காலை நிதி மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்தார். அதற்கு முன்னதாக டெல்லியிலுள்ள ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற விஞ்ஞானம் குறித்த கருத்தரங்கில் அவர் கலந்து கொண்டார். அப்போது இந்திய மாணவர்களின் கருத்துகள் அவரை பெரிதும் ஈர்த்தது.

இந்நிலையில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு கெர்ரியும், அமெரிக்க வர்த்தக துறை மந்திரி பென்னி ப்ரிட்ஸ்கரும் பேட்டியளித்தனர். அப்போது மோடிக்கு அமெரிக்க விசா வழங்க மறுத்தது வேறொரு அரசு என்று தெரிவித்த கெர்ரி, நாங்கள் மோடிக்கு விசா வழங்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார். வரும் செப்டம்பர் மாதம் மோடிக்கும் ஒபாமாவுக்கு இடையே ஆக்கப்பூர்வமான சந்திப்பு நிகழும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என கெர்ரி மேலும் கூறினார்.

முன்னர் என்ன நடந்தது என்பதை பார்க்காமல் எதிர்காலத்தில் என்ன நடக்கவேண்டும் என்று பார்க்கவே விரும்புகிறோம் என கூறிய கெர்ரி, மோடி செல்லும் பாதை தங்களுக்கு ஆச்சர்யமளித்ததாக கூறினார். அது போல் பென்னி கூறுகையில், புதிய அரசின் அணுகுமுறையும் தொனியும் எங்களுக்கு வியப்பை தருகிறது என்றார்.

மேலும் செய்திகள்