முக்கிய செய்திகள்:
முறைகேடாக வந்தவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடு- ஆஸ்திரேலியா

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக ஆஸ்திரேலியா வந்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்து வருவதாக ஆஸ்திரேலிய குடியேற்ற மந்திரி ஸ்காட் மோரிசன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

கடந்த சில நாட்களாக எங்கள் நாட்டிற்கு முறைகேடாக வந்த 37 குழந்தைகள் உள்ளிட்ட பலர் தடுப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு குழு புதுச்சேரியில் இருந்து வந்தவர்கள்.

இலங்கையில் இருந்து வரும் தமிழர்களை இந்தியா ஏற்றுக்கொள்ளாததால் அவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு வருகிறார்கள். இந்தியாவின் துன்புறுத்தல் இருப்பதாக இங்கு வந்தவர்கள் கூறுகிறார்கள். இது முட்டாள்தனமானது என்பது எனது கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்