முக்கிய செய்திகள்:
மும்பையில் நிலச்சரிவு: 6 வயது சிறுவன் பலி

கடும் மழை காரணமாக மும்பை புறநகர் பகுதியான செம்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 வயது சிறுவன் பலியானான்.

மும்பையில் கடந்த 48 மணி நேரமாக கன மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக செம்பூர் கிழக்கு, வசி நாகா அருகே உள்ள மகுல் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது குடிசை வீடு ஒன்று புதைந்ததில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கணேஷ் குமார் கொராடே என்ற சிறுவன் பலியானதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்த நிலச்சரிவில் ஆறு குடிசைகள் முற்றிலும் புதைந்து போனது. இக்குடிசைகளில் தங்கிருந்தவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இதனிடையே அடுத்த 48 மணி நேரத்திற்கு கன மழை பெய்யும் என்று மும்பை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்