முக்கிய செய்திகள்:
பிரதமர் அலுவலகத்திலிருந்து கோப்புகள் சோனியாவுக்கு சென்றதில்லை: மன்மோகன் சிங்

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியுமான நட்வர்சிங் எழுதிய புத்தகத்தில் பல்வேறு பரபரப்பான கருத்துகளை கூறியுள்ளார்.

சோனியா பிரதமரானால் கொல்லப்படுவார் என நினைத்த ராகுல் அவரை பதவியேற்க விடாமல் தடுத்ததாக கூறியிருந்தார். அது போல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் அவரது அலுவலகத்தில் இருந்து கோப்புகள் அனைத்தும் சோனியாவின் கவனத்துக்கு சென்று அவரது ஒப்புதலை பெற்று திரும்பிய பின் தான் மன்மோகன் அதில் கையெழுத்திடுவார் என்றும் நட்வர் சிங் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.

நட்வர் சிங்கின் கருத்துக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளவாறு பிரதமர் அலுவலகத்தில் இருந்து கோப்புகள் ஏதும் சோனியாவின் பார்வைக்கு செல்லவில்லை என்று மன்மோகன் கூறியுள்ளார்

மேலும் செய்திகள்