முக்கிய செய்திகள்:
ஒட்டுக்கேட்பு உபகரணம் என் வீட்டில் இல்லை: நிதின் கட்கரி

டெல்லி தீன் மூர்த்தி சாலையில் உள்ள மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் வீட்டில், ஒட்டுக்கேட்பு உபகரணங்கள் இருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகின. மேலும், இதுதொடர்பாக கட்கரியின் வீட்டில் நிபுணர் குழுவினர் ஆய்வு நடத்தியதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ளார் நிதின் கட்கரி. இது தொடர்பாக மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தின. இவ்விவகாரத்தில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் வலியுறுத்தியிருந்தார்.

ஆனால், கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில், என் வீட்டில் எந்த ஒட்டுகேட்பு உபகரணமும் இல்லை என்று நான் ஏற்கெனவே கூறிவிட்டேன். அதையே இப்போது மீண்டும் வலியுறுத்துகிறேன் என பதிவு செய்துள்ளார்.இதற்கிடையில், டெல்லியில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், இவ்விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது அவர், நிதின் கட்கரியே இந்த புகாரை திட்டவட்டமாக மறுத்துவிட்ட பிறகு அதில் சொல்வதற்கு வேரொன்றும் இல்லை என தெரிவித்துவிட்டார்.மத்திய அமைச்சர் வீட்டின் படுக்கறையில் இருந்து ஒட்டுகேட்பு உபகரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சர்களுக்குள் பரஸ்பரம் நம்பிக்கை இல்லாதையே உணர்த்துகிறது என காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

மேலும் செய்திகள்