முக்கிய செய்திகள்:
பாஜக, சிவசேனா மீது ராகுல் கடும் தாக்கு

நோன்பு இருந்த முஸ்லிம் ஒருவரின் வாயில் உணவைத் திணித்த விவகாரம் தொடர்பாக பாஜக, சிவசேனாவை ராகுல் காந்தி கடுமையாக விமர் சித்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் கூறியது:

இதுதான் பாஜக மற்றும் சிவசேனாவின் கொள்கை. தாங்கள் நினைத்தபடி நடக்க மக்களை கொடுமைப்படுத்துகிறார்கள். இது நாட்டை நாசமாக்கும் செயல். இவர்களுக்கு எதிராகத்தான் நாங்கள் அனுதினமும் போராடி வருகிறோம். காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். அமேதி தொகுதியில் தன்னை வெற்றி பெறச் செய்ததற்காக ராகுல் நன்றி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்