முக்கிய செய்திகள்:
சோனியாவுக்கு உ.பி. ஐகோர்ட் நோட்டீஸ்

தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சோனியா காந்திக்கு அலகாபாத் ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி உத்தரபிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து அலகாபாத் ஐகோர்ட்டில் ரமேஷ் சிங் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவர் தனது மனுவில், சோனியா காந்தி இதுவரை இத்தாலி குடியுரிமையை வழங்கவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் முஸ்லிம்கள் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கும்படி டெல்லி இமாம் வேண்டுகோள் விடுத்தார். இவை சட்டப்படி தவறு. எனவே, சோனியாவின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி தருண் அகர்வால் பெஞ்ச், சோனியாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், இதன் விசாரணையை செப்டம்பர் 8-ந்தேதிக்கு ஒத்தி வைத்தது. அப்போது சோனியா பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்