முக்கிய செய்திகள்:
டெல்லி காவல்துறை தலைமை அலுவலகத்தில் தீ விபத்து

புதுடெல்லியில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அலுவலகத்தின் 4-வது மாடியில் தீ பிடித்ததையடுத்து அங்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உள்ளே இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், 8 வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறிது நேரத்தில் தீயை அணைத்தனர். 4-வது மாடியில் உள்ள பேட்டரி பேனலில் தீப்பிடித்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

டெல்லி காவல்துறை தலைமை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்படுவது இது மூன்றாவது முறையாகும். ஏற்கனவே 10வது மாடி மற்றும் பிஆர்ஓ அலுவலகத்தில் தீப்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்