முக்கிய செய்திகள்:
ஆந்திராவில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி

ஆந்திராவில் ரூ.1.5 லட்சம் வரையிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அரசு அறிவித்துள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இதுபற்றி சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

ஒரு குடும்பத்திற்கு ரூ.1.5 லட்சம் வரையிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யப்படும். கடும் மன உளைச்சலில் இருக்கும் விவசாயிகளின் நலன் கருதி அரசு இந்த தைரியமான முடிவை எடுத்துள்ளது. இதன்மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.8 ஆயிரம் கோடி நிதிச்சுமை ஏற்படும். ஆனால், எந்த வழியிலாவது இதனை சமாளிப்போம்.

கடள் தள்ளுபடி தவிர, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டிருந்த ரூ.7600 கோடி கடனை தள்ளுபடி செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது. நெசவாளர்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறு கைவினைஞர்களுக்கான 300 கோடி ரூபாய் கடனும் தள்ளுபடி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்