முக்கிய செய்திகள்:
மேற்கு வங்கத்தில் மூளை வீக்க நோயால் பலர் பலி

வட மேற்கு வங்கத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் மூளை வீக்க நோயால் 60 பேர் வரை இறந்திருப்பதாக அம்மாநில சுகாதாத்துறை தலைமை இயக்குனரான பிஸ்வரஞ்சன் சத்பதி கூறியுள்ளார்.

இப்பகுதி முழுவதும் இந்நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளளதாக கூறியுள்ள அவர், நிலைமை அபாய கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறினார். நேற்று வடமேற்கு வங்கத்தில் உள்ள சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த அவர் கடந்த ஜூலை 7ந் தேதி முதல் ஜூலை 20ந் தேதி வரை இந்த 60 பேரும் இறந்ததாக தெரிவித்தார். இது வரை 344 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டதாக கூறிய அவர் ஜப்பானிய மூளை வீக்க நோயாலேயே இவர்கள் அனைவரும் இறந்துள்ளனர் என்றார்.

மூளை வீக்க நோய் பாதிப்பு குறித்து கண்டறியும் கருவிகள் கூட அங்குள்ள மருத்துவமனைகளில் இல்லாததால் பெரும்பாலானோர் இறக்க நேரிட்டுள்ளது. கடந்த வருடம் இந்நோய்க்கு 5 பேர் மட்டுமே பலியான நிலையில் தற்போது 60 பேர் பலியாகியிருப்பது அம்மாநிலத்தில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது அங்கு எந்நேரமும் பணியில் மருத்துவர்கள் இருக்க அரசு ஆணையிட்டுள்ளது.

மேலும் செய்திகள்