Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/content/55/10886855/html/makkalkattalai/tamizhagatimes/adminpanel/inc/config.php on line 12
தமிழக மீனவர்கள் விடுவிப்பு - Tamizhaga Times
முக்கிய செய்திகள்:
தமிழக மீனவர்கள் விடுவிப்பு

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்கின்றனர். பின்னர் விசாரணை அல்லது நீதிமன்றக்காவலுக்கு பிறகு விடுதலை செய்யப்படுகின்றனர்.

அந்த வகையில் நேற்று 36 தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே சிறைபிடிக்கப்பட்டு, விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இலங்கை சிறையில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 9-ம் தேதி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இவர்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை விடுதலை செய்ய நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இவர்கள் இந்திய கடலோர காவல் படையினரிடம் விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்