முக்கிய செய்திகள்:
முல்லைப் பெரியாறு அணை : நீர்மட்டத்தை உயர்த்த ஏற்பாடுகள் தயார்

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதையடுத்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர். நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பான மத்திய அரசின் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவினர் இன்று காலை பெரியாறு அணை பகுதியில் ஆய்வு செய்தனர். அணையில் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவது குறித்து ஆய்வு செய்த பின்னர் 13 மதகு பகுதிகளுக்கு சென்று ஷட்டர்கள் பலமானதாக உள்ளதா? எவ்வளவு நீர் வெளியேற்ற முடியும் என்பது குறித்து ஆலோசித்தனர்.

அப்போது இறுதிக்கட்ட பணியாக அணையின் 13 மதகுகளின் கதவுகளும் கீழிறக்கப்பட்டன. தண்ணீர் 136 அடிக்கு மேல் அதிகரிக்கும்போது உபரிநீர் இந்த மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வந்தன. 36 ஆண்டுகளுக்குப் பிறகு 13 மதகுகளின் கதவுகளும் இப்போது கீழிறக்கப்பட்டுள்ளதால், அணையில் இனி 142 அடி வரை தண்ணீரை தேக்க முடியும். இறுதிக்கட்ட பணிகளை கண்காணிப்புக் குழு பார்வையிட்டது.

தேக்கடியில் கண்காணிப்பு குழுவினரின் புதிய நிரந்தர அலுவலகத்திற்காக கேரள நீர்வளத்துறை குமுளியில் 3 இடங்களை தேர்வு செய்து உள்ளது. இதில் எந்த இடத்தில் அலுவலகம் வேண்டும் என்பதை கண்காணிப்பு குழுவினர் இன்று பார்வையிட்டனர். இன்று மாலை கண்காணிப்பு குழுவினரின் முதல் கட்ட பேச்சுவார்த்தை தேக்கடியில் நடக்கிறது. அப்போது நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்