முக்கிய செய்திகள்:
மக்களவையில் தம்பிதுரை குற்றச்சாட்டு

மக்களவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு அ.தி.மு.க. மக்களவைக் குழு தலைவர் தம்பிதுரை பேசியதாவது:-

கிராமப்புற பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட நமது நாட்டில், விவசாயத்திற்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் போதுமான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. நாட்டின் விவசாயம் அழிந்து வருகிறது. அதனை மீட்டெடுப்பதன் மூலமே பொருளாதார நிலைத்தன்மையை நாடு பெற முடியும்.

விவசாயப் பொருட்களுக்கான அதிகபட்ச ஆதரவு விலையை உயர்த்த வேண்டும். நடப்பு நிதி ஆண்டில் விவசாயக் கடனுக்காக 8 லட்சம் கோடி ரூபாயை அரசு இலக்காக நிர்ணயித்திருப்பது வரவேற்கத்தக்கது. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்