முக்கிய செய்திகள்:
கோண்டா-பெரெய்லி எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் தீ

கோண்டாவிலிருந்து பெரெய்லி செல்லும் கோண்டா எக்ஸ்பிரஸ் நேற்றிரவு 10:32 மணியளவில் ரிசியா மற்றும் மத்தேரா ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது அதன் என்ஜினில் திடீரென தீப்பிடித்தது.

இதனால் ரெயிலில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் தங்களது பெட்டிகளில் இருந்து உடனடியாக கீழிறங்கியதுடன் ரெயில்வே அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற ரெயில்வே துறை அதிகாரிகளும், தீயணைப்பு துறையினரும் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்தால் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. வடக்கு ரெயில்வேயின் செய்தி தொடர்பாளரான அலோன் ஸ்ரீவத்சவா கூறுகையில், தீப்பற்றியதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்றார். பின்னர் வேறொரு என்ஜின் கொண்டுவரப்பட்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிகாலை 2.55 மணியளவில் மீண்டும் அந்த ரெயில் புறப்பட்டு சென்றது.

மேலும் செய்திகள்