முக்கிய செய்திகள்:
எம்.எல்.ஏக்களுக்கு அபராதம்: வசுந்தரா அதிரடி உத்தரவு

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை கூட்டம் நடைபெறும் போது அவைக்கு தாமதமாக வரும் பா.ஜ.க.எம்.எல்.ஏ.க்கள் 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என அம்மாநில முதல்வரான வசுந்தரா ராஜே சிந்தியா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் அம்மாநிலத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ளும் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து தாமதமாக வருவது வாடிக்கையாகி வருகிறது. அதிலும் குறிப்பாக பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோர் தாமதமாக வருகின்றனர். மக்கள் பிரதிநிதிகள் அவைக்கு தாமதமாக வருவது ஏற்புடையதல்ல என்று கருதிய வசுந்தரா இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

அதன்படி சட்டமன்ற கூட்டம் நடைபெறும் நாட்களில் அவைக்கு தாமதமாக வரும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். முதல்வர் வசுந்தராவின் இந்த அதிரடி முடிவுக்கு அம்மாநில பா.ஜ.க. வினரும், மக்களும் பெருத்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்