முக்கிய செய்திகள்:
திருப்பதியில் ஒரே நாளில் 44 ஆயிரம் பக்தர்கள் வருகை

திருப்பதியில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது.

சனிக்கிழமையான நேற்று பக்தர்கள் கூட்டம் கட்டுங்கடங்காமல் இருந்தது. அதிகாலை முதல் மாலை 6 மணி வரை 57,340 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.பாதயாத்திரையாக மட்டும் நேற்று ஒரே நாளில் 44 ஆயிரம் பக்தர்கள் வந்து இருந்தனர். இது ஒரு வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது. பிரமோற்சவ காலங்களில் கூட இந்த அளவு பக்தர்கள் வந்ததில்லை என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

தர்ம தரிசனத்துக்கு 24 மணி நேரம் ஆனது. பாதயாத்திரை பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க 13 மணி நேரம் காத்து நின்றனர். பக்தர்கள் கூட்டத்தால் 300 ரூபாய் சிறப்பு டிக்கெட் விநியோகம் காலை 10 மணிக்கே நிறுத்தப்பட்டது. இதே போல் வி.ஐ.பி. பிரேக் தரிசனமும் ரத்து செய்யப் பட்டது.முடிகாணிக்கைக்கு கூட பக்தர்கள் 4 மணி நேரம் வரிசையில் காத்து நின்றனர். கோவிலில் நேற்று ஒரு நாள் உண்டியல் மூலம் ரூ.1.98 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

திருப்பதியில் பவுர்ணமி கருடசேவை இரவு 7 மணிக்கு நடந்தது. கருட வாகனத்தில் மலையப்பசாமி மாட வீதியில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்