முக்கிய செய்திகள்:
புதிய நம்பிக்கை ஒளி தரும் பட்ஜெட்: மோடி

மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களை உறுதியான நம்பிக்கையாக மாற்றும் பட்ஜெட் ஆகும் என்று அவர் மேலும் பாராட்டினார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:

இந்த பட்ஜெட் மக்களின் பங்களிப்பு மற்றும் மக்கள் சக்திக்கு தூண்டுகோலாக அமைந்துள்ளது. இந்தியாவை திறமை மிக்க நாடாகவும் நவீன தொழில்நுட்பங்களின் வழிகாட்டுதலுடன் டிஜிட்டல் மயமாக்க இந்த பட்ஜெட் முயற்சி செய்துள்ளது.

நோய்வாய்ப்பட்ட இந்த பொருளாதாரத்திற்கு இந்த பட்ஜெட் ஒரு சஞ்ஜீவனி மருந்து போல் அமைந்துள்ளது. வரிசையில் கடைசியில் நின்று கொண்டிருப்பவருக்கு இந்த பட்ஜெட் ஒரு சூர்யோதயம். வளர்ச்சித்திட்டங்கள் இதுவரை எட்டிப்பார்க்காத இடங்களையும் சென்றடையும் பட்ஜெட் ஆகும் இது. இந்தியாவை வளர்த்தெடுப்பதிலும், தேசம் சந்திக்கும் சவால்களிலிருந்து மீட்கவும் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

நாங்கள் ஆட்சி அமைக்கும்போது இந்த நாட்டை அதன் நெருக்கடியிலிருந்து காப்பாற்றுவோமா என்று விவாதங்கள் நடந்தன, ஆனால் ரயில்வே பட்ஜெட் மற்றும் இந்த பொது பட்ஜெட் நாங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதையே காட்டியுள்ளது.

ஏழை மற்றும் புதிய நடுத்தர மக்கள், நடுத்தர மக்கள், ஆகியோருக்கு இந்த அரசு சாத்தியமாகக் கூடிய அனைத்து உதவிகளையும் செய்ய தீர்மானம் செய்துள்ளது. 125 கோடி மக்களின் திறமை மீது அரசுக்கு நம்பிக்கை இருக்கிறது. அந்த பலத்தை முறைப்படுத்தி நாட்டை புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்வோம் என்று கூறினார் மோடி.

மேலும் செய்திகள்