முக்கிய செய்திகள்:
மத்திய பட்ஜெட் : அருண் ஜேட்லி மக்களவையில் தாக்கல் செய்தார்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் தாக்கல் செய்தார்.

2014-15 நிதியாண்டுக்கான இந்த பட்ஜெட்டில், வருமான வரி விகிதங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக (ரூ.50,000) உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சிறிய மற்றும் மிகச்சிறிய வரிவிதிப்பிற்கு உரியவர்களுக்கு சாதகமாக இருக்கும் வகையில் அமைந்துள்ளது.

வருமான வரிச் சட்டப்பிரிவு 80(சி)-ன் கீழ் முதலீட்டிற்கான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதும் அவர்களுக்கு சாதகமானதே.

சொந்த வீட்டில் குடியிருப்பவர் பெறும் வீட்டுக்கடன் மீதான வட்டிக்கு அளிக்கப்படும் விலக்கு வரம்பு ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளார்.

உற்பத்தி வரிவிதிப்பின் மூலம், சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் விலை அதிகரிக்கிறது. வரிவிலக்கு மூலம் ஏழை மக்கள் பயன்படுத்தும் சிஆர்டி தொலைக்காட்சிகள் விலை குறைகிறது. அந்நிய நேரடி முதலீடு மூலம் கூடுதல் நிதி ஆதாரம் திரட்ட குறிப்பிட்ட சில துறைகளில் அந்நிய நேரடி முதலீடு ஊக்குவிக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்