முக்கிய செய்திகள்:
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குபுவாரா மாவட்டத்தில் லஷ்கர் இ தொய்பா இயக்க தீவிரவாதி சுட்டு கொலை செய்யப்பட்டான்.

காஷ்மீர் மாநிலம் குபுவாரா மாவட்டத்தில் உள்ள ஹாம்லா பதி என்ற இடத்தில் தீவிரவாதியின் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து மத்திய பாதுகாப்பு படை போலீசார் கிராமத்திற்கு சென்றுனர். கிராமத்தில் பாதுகாப்பு படையினர் ரோந்து சென்றபோது அங்கு மறைந்து இருந்த தீவிரவாதி அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினான். பதிலுக்கு பாதுகாப்பு படை சார்பில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் தீவிராவதி சுட்டுக் கொலை செய்யப்பட்டான். இந்த துப்பாக்கி சூடு சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்தார் என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தீவிரவாதி அபு மோசா பாகிஸ்தானை சேர்ந்தவன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்