முக்கிய செய்திகள்:
வெளிநாட்டு செயற்கைகோள்களை ஏவியதன் மூலம் இந்தியாவிற்கு எவ்வளவு வருமானம் ?

வெளிநாடுகளுக்கான செயற்கோளை தயாரித்து அவற்றை விண்ணில் செலுத்தியதற்காக இந்தியா 40 மில்லியன் யூரோக்கள் வருமானம் பெற்றதாக தெரியவந்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏவப்பட்ட 15 வெளிநாட்டு செயற்கைகோள்கள் மூலம் இத்தொகையை இந்தியா வருமானமாக பெற்றுள்ளதாக தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான துறை அமைச்சரான ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

லோக்சபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அவர் அளித்துள்ள பதிலில் தான் இத்தகவல் கூறப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு முதல் 2014 வரையிலும் மற்றும் இந்த நிதியாண்டிற்கும் சேர்த்து 15 வெளிநாட்டு செயற்கைகோள்கள், 14 இந்திய செயற்கோள்களை நம் நாடு ஏவியதாக அவர் கூறியுள்ளார்.

வெளிநாட்டு செயற்கைகோள்களை ஏவியதற்காக இந்தியா 39.82 மில்லியன் யூரோக்களை ஊதியமாக பெற்றுள்ளது. மேலும் வரும் 2020 ஆம் ஆண்டிற்கான திட்டப் பணிகளை முன்னதாகவே இந்தியா அரசு தயாராக வைத்துள்ளதாக அவர் கூறினார். செவ்வாய் கிரகத்தை ஆராய இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட விண்கலத்திற்காக மார்ச் 31, 2014 வரை இந்தியா 350 கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக அதன் ஒட்டுமொத்த செலவின மதிப்பு 450 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்