முக்கிய செய்திகள்:
பாரதீய ஜனதா தலைவராக அமித்ஷா தேர்வு

பாரதீய ஜனதா தலைவராக இருந்த ராஜ்நாத்சிங், நரேந்திர மோடி மந்திரிசபையில் உள்துறை மந்திரியாக பொறுப்பேற்று இருக்கிறார். இதனால் பா.ஜனதா தலைவர் பதவி காலியாக இருந்தது. இதற்கு அமித்ஷா பெயர் சிபாரிசு செய்யப்பட்டது.

பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பா. ஜனதா மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 71 இடங்களை கைப்பற்றியது. இதற்கு மோடிக்கு மிகவும் நெருக்கமானவரும், குஜராத் முன்னாள் மந்திரியுமான அமித்ஷாதான் காரணம். இதனால் அவரை பா.ஜனதா தேசிய தலைவராக நியமிக்க முன்னணி தலைவர்கள் முடிவு செய்தனர்.

பா.ஜனதா உயர்மட்டக் குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் அமித்ஷா பாரதீய ஜனதா தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி இனிப்பு வழங்கினார். ராஜ்நாத்சிங் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அத்வானி, அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட தலைவர்களும் அமித்ஷாவுக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்தினார்கள்.

மேலும் செய்திகள்