முக்கிய செய்திகள்:
எதிர்கட்சி தலைவர் பதவி காங்கிரஸ் மனு

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 44 இடங்களே கிடைத்தன.

பாராளுமன்றத்தில் ஒரு கட்சிக்கு எதிர்கட்சி தலைவர் அந்தஸ்து கிடைக்க மொத்த எண்ணிக்கையில் 10 சதவீதம் இருக்க வேண்டும். அதன்படி ஒரு கட்சிக்கு 55 எம்.பி.க்கள் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கைக்கு குறைவாக இருப்பதால் காங்கிரசுக்கு எதிர்கட்சி தலைவர் பதவி கிடைக்காமல் இருக்கிறது.

எதிர்கட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கே வழங்கப்பட வேண்டும் என்று சோனியா காந்தி கூறி வருகிறார். இது தொடர்பாக அவர் நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார்.எதிர்கட்சி அந்தஸ்து விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.க்களுடனும் அவர் ஆலோசனையும் நடத்தினார்.

இதற்கிடையே எதிர்கட்சி தலைவர் பதவியை பெறுவது தொடர்பாக சபாநாயகர் சுமித்ரா மகாஜனை காங்கிரஸ் சார்பில் இன்று மல்லிகார்ஜூன் கார்கே சந்தித்து மனு கொடுத்துள்ளார்.காங்கிரசின் எதிர்கட்சி அந்தஸ்து கோரிக்கையை பா.ஜனதா அரசு நிராகரித்து வருகிறது. இது குறித்து மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:–

மொத்த உறுப்பினர்களில் 10 சதவீதம் இல்லாத கட்சிக்கு எதிர்கட்சி அந்தஸ்து வழங்க இயலாது என்பது எனது கருத்தாகும். இதுகுறித்து சபாநாயகர் தான் முடிவு செய்ய வேண்டும்.இது தொடர்பாக காங்கிரஸ் தாராளமாக கோர்ட்டுக்கு செல்லலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்