முக்கிய செய்திகள்:
ரயில்வே பட்ஜெட் : மம்தா குற்றச்சாட்டு

ரயில்வே பட்ஜெட் தொடர்பாக, திரிணமூல் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட கருத்தில், இதற்கு முன், இந்த அளவில் மக்கள் வஞ்சிக்கப்பட்டதாகவும் அவமதிக்கப்பட்டதாகவும் தெரியவில்லை எனக் குறிப்பட்டிருக்கிறார்.

மேலும், செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, காங்கிரஸ் மீது இருந்த அதிருப்தியால்தான், ஐக்கிய முற்போக்கு கூட்டணியை புறக்கணித்து, தேசிய ஜனநாயக கூட்டணியை மக்கள் தேர்ந்தெடுத்தனர்.

தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் காங்கிரஸ், பாஜக அல்லாத மாற்றுக் கட்சிகள் இருப்பதனால், அம்மாநில மக்கள் அந்தக் கட்சிகளை புறக்கணித்து மாநிலக் கட்சிகளை தேர்ந்தெடுத்தனர்.

ஆனால், மக்களின் உரிமைகளையும் மாநிலத்தின் கவுரவத்தையும் மத்தியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி முற்றிலும் வஞ்சித்துவிட்டது. என் மாநிலம் புறக்கணிக்கப்பட்டது குறித்து நான் குரல் எழுப்பியே ஆக வேண்டும் என்றார் மம்தா.

மேலும் செய்திகள்