முக்கிய செய்திகள்:
விரைவில் புதிய கவர்னர்கள்: ராஜ்நாத்சிங் அறிவிப்பு

புதுடில்லி: அடுத்த சில நாட்களில் புதிய கவர்னர்கள் நியமிக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.பார்லிமென்ட பட்ஜெட்கூட்ட தொடர் துவங்கிய நிலையில் புதிய கவர்னர்களும் நியமிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.


விரைவில் அறிக்கை:சில மாநில கவர்னர்கள் மாற்றம் குறித்து அறிக்கை வரும் நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.பட்ஜெட் கூட்டத்தொடரின் இடைப்பட்ட காலத்திலே அறிக்கை வெளியாகிவிடும்.இதுவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாக இருந்தால் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசியில் தான் இது குறித்த அறிக்கை வெளியிடப்படும் என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த ஞாயிறன்று அறிவித்தது குஜராத் கவர்னராக இருந்த கமலா பெனிவாலை மிசோராமிற்கு மாற்றம் செய்து ராஷ்டிரபதிபவன் உத்தரவிட்டது.அவருக்கு பதவிகாலம் இன்னும் 6 மாதங்களில் முடிவடைகிறது.இதில் அவர் மிசோராமில் பணியாற்ற வேண்டும்.இதேபோல் மிசோராம் கவர்னராக இருந்த புருஷோத்தமன் நாகலாந்திற்கு மாற்றப்பட்டார். ராஜஸ்தான் கவர்னர் மார்கரெட் ஆல்வா குஜராத் கவர்னர் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இவருக்கு அடுத்தமாதம் பதவிகாலம் முடிகிறது.


தேசிய ஜனநாயக நியமனம் வாய்ப்பு பட்டியலில் முன்னாள் உ.பி. சபாநாயகர் கேசரிநாத் திரிபாதி, பஞ்சாப் தலைவர் பல்ராம் தாஸ் டாண்டன், முன்னாள் எம்.பி. லால்ஜி டாண்டன், கேரளாவில் ராஜகோபால், முன்னாள் மத்திய அமைச்சர் ராம் நாயக், டில்லி தலைவர் மல்ஹோத்ரா மற்றும் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான யஷ்வந்த சின்ஹா​​ ஆகியோர் உள்ளனர்.கல்யாண் சிங் கவர்னர் பதவி வழங்கபடும் என தெரிகிறது.ஆனால் இன்னும் தீவிர அரசியலில் இருந்து விலகுவதற்கு விரும்பவில்லை என்றார்.

மேலும் செய்திகள்