முக்கிய செய்திகள்:
பாராளுமன்ற பாதுகாப்பு : துணை ராணுவப் படை

பாரதிய ஜனதா தலைமையிலான புதிய அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் 7-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் பாராளுமன்றத்தின் பாதுகாப்பு பொறுப்புகளை துணை ராணுவப்படையின் பயிற்சி பெற்ற கமாண்டோ படையினர் அடங்கிய சிறப்பு பாதுகாப்பு குழு ஏற்றுள்ளது.

பாராளுமன்ற பாதுகாப்பு பணிக்குழு என்று அழைக்கப்படும் இந்த குழுவின் வீரர்கள் பாராளுமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வி.வி.ஐ.பி.க்கள், எம்.பி.க்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வார்கள். இவர்களுடன் டெல்லி போலீசார், பாராளுமன்ற பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

2001 பாராளுமன்றம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து முதல் முறையாக இந்த குழு பாராளுமன்ற பாதுகாப்புக்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகள்