முக்கிய செய்திகள்:
ஜான் மெக்கெய்ன் மோடியுடன் சந்திப்பு

நாட்டின் பாதுகாப்பிற்கான ஆயுதங்களை இதுவரை இறக்குமதி செய்து வந்த இந்தியா தற்போது பாதுகாப்பிற்காக நவீன ஆயுதங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்நிய நாட்டின் முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவின் இத்திட்டத்தை தெரிந்து கொண்ட அமெரிக்கா இந்த ஆயுத உற்பத்தி திட்டத்தை தங்கள் நாட்டிற்கு சாதகமாக மாற்ற திட்டமிட்டுள்ளது.

எனவே ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளை தொடங்குவதில் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவேண்டும் என அந்நாடு விரும்புகிறது. தனது விருப்பத்தை தெரிவிப்பதற்காக அரிசோனா மாகாண செனட்டரான ஜான் மெக்கெய்னை அந்நாடு இந்தியாவிற்கு அனுப்பியது. அதன்படி இந்தியா வந்த அவர் பிரதமர் மோடியை இன்று சந்தித்து இரு தரப்பு உறவுகளுக்கு புத்துயிர் அளிக்கவும், கூட்டு முயற்சிகளுக்கு விரிவாக்கம் செய்யவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அவர் செனட்டராக தேர்வு செய்யப்பட்ட அரிசோனா மாகாணத்தில் தான் போயிங் மற்றும் ராய்தியான் ஆகிய ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்