முக்கிய செய்திகள்:
முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த குழு அமைப்பு

முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் 7-ம் தேதி அனுமதி வழங்கியது. இந்த உத்தரவை நிறைவேற்றுவதற்கு மேற்பார்வைக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன்படி, மேற்பார்வைக் குழு அமைத்து மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த குழுவின் தலைவராக மத்திய நீர் ஆணைய தலைமை பொறியாளர் எல்.ஏ.வி.நாதன் செயல்படுவார். தமிழகத்தின் உறுப்பினராக பொதுப்பணித்துறை முதன்மை செயலரும், கேரள உறுப்பினராக அம்மாநில நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழு முல்லைப் பெரியாறு அணை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆய்வில் ஈடுபடுவதுடன், அணையின் பாதுகாப்பு குறித்து இரு மாநிலங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்க இயலும். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் தமிழகத்திற்கு அனுமதி அளிக்கும்.

மேலும் செய்திகள்