முக்கிய செய்திகள்:
அனைவருக்கும் வீடு கட்டித் தருவதே அரசின் நோக்கம் : வெங்கையா நாயுடு

நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 2022-ம் ஆண்டுக்குள் வீடு கட்டித் தருவதே அரசின் முக்கிய நோக்கம் என நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சரான வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

இந்த சவாலான பணியை விரைவில் முடிக்க யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்கள் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என பிரதமர் விரும்புவதாக அவர் கூறியுள்ளார். பெரிய நிதி ஆதார தேவை உள்ள இந்த பணிக்காக எந்த வகையில் நிதி ஒதுக்கலாம் என்று அரசு ஆராய்ந்து வருவதாக, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித் துறை அதிகாரிகளின் மாநாட்டின் போது நாயுடு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்