முக்கிய செய்திகள்:
ஆந்திரா ரெயிலில் திடீர் தீ : பலர் காயம்

ஆந்திர மாநிலம் குண்டக்கல்–ரெய்ச்சூர் இடையே பயணிகள் ரெயில் ஓடுகிறது. இந்த ரெயில் நேற்று ரெய்ச்சூரில் இருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு குண்டக்கல்லில் வந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டது.

கர்னூல் மாவட்டம் நஞ்சர்பா ரெயில் நிலையம் அருகே வந்த போது ரெயிலின் 2 பெட்டியில் இருந்து புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பற்றியது. இதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினார்கள்.

பின்னர் அலறியபடி ரெயிலில் இருந்து குதித்து ஓடினார்கள். இதனால் ஏற்பட்ட தள்ளு முள்ளு சம்பவத்தில் 16 பயணிகள் காயம் அடைந்தனர். சிலருக்கு தீக்காயமும் ஏற்பட்டது.பயணிகள் சிலர் துணிச்சலுடன் செயல்பட்டு தண்ணீர் கொண்டு ரெயிலில் பிடித்த தீயை அணைத்தனர். விபத்து குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

மேலும் செய்திகள்