முக்கிய செய்திகள்:
கப்பலில் கியாஸ் கசிந்து 5 பேர் கருகி சாவு

குஜராத் மாநிலம் பவநகர் மாவட்டம் ஆலங் என்ற இடத்தில் ஆசியாவின் மிகப்பெரிய கப்பல் தளம் உள்ளது. இங்கு பழைய கப்பல்களை உடைக்குபணி மற்றும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இன்று ஒரு கப்பலை உடைத்த போது அதில் இருந்த கியாஸ் கசிந்து தீப்பற்றி வெடித்துச் சிதறியது.

இதில் 5 தொழிலாளர்கள் பலியானார்கள். 10–க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்