முக்கிய செய்திகள்:
கபில் சிபல் செல்லும் புதிய வீட்டு வாடகை 16 லட்சம்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய சட்டத்துறை மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர் கபில் சிபல். இவர் மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்து விட்டார். அவர் உட்பட தோல்வி அடைந்த 265 எம்.பி.க்களின் வீடுகளை காலி செய்யும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வீடுகளை காலி செய்ய இந்த மாத இறுதிவரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வீடுகள் புதிய எம்.பி.க்களுக்கு ஒதுக்கப்படும். புதிதாக 316 எம்பி-க் கள் தேர்வாகி உள்ளனர்.

கபில் சிபல் டெல்லியின் பிரதான பகுதியான ஜோர் பாக்கில் உள்ள லூத்யன்ஸ் பகுதியில் வீடு பார்த்துள்ளார். நாலே முக்கால் கிரவுண்டு பரப்பளவில் உள்ள இந்த பங்களாவுக்கு ரூ.16 லட்சம் மாத வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொகுசு பங்களாக்கள் உள்ளன.

கபில் சிபல் குடியேறவுள்ள பங்களா டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சித்தார் சரீன் என்பவருக்குச் சொந்தமானது. இவர் மாத வாடகை ரூ.18 லட்சம் கேட்டுள்ளார். பேச்சுவார்த்தை மூலம் ரூ.16 லட்சம் என்று முடிவாகி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஒப்பந்தம் அமலுக்கு வருவதால், அதற்கு முன்பாக கபில் சிபல் தீன் மூர்த்தி சாலையில் உள்ள அவரது அரசு பங்களாவை காலி செய்து விட்டு புதிய பங்களாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்