முக்கிய செய்திகள்:
ஹெல்மெட்: முஸ்லிம் பெண்களுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை

டெல்லியில் முஸ்லிம் பெண்களுக்கு ஹெல்மெட் அணிவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி போக்குவரத்துதுறை அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், ‘‘இதுதொடர்பாக முஸ்லிம் அமைப்புகள் எங்களுக்கு கடிதம் எழுதியுள்ளன. பர்தாவுடன் ஹெல் மெட்டும் அணியும்போது சிரமம் ஏற்படும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இப் படி இரண்டையும் அணிந்து ஓட்டும் பெண்களால் சரியாக பார்க்க முடியா மல் போய்விடும் எனவும் சுட்டிக் காட்டியுள்ளனர்’’ என்றனர்.

டெல்லியில் இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்கள் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பது அதிகமாகி வருகிறது. இதுதொடர்பாக நீதிமன்றம் கண்டித்ததன் பேரில் டெல்லி அரசு, ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்க முடிவு செய்துள்ளது. இதற்கு ஆட்சேபம் தெரிவிப்பவர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம் எனவும் கடந்த மே 2-ல் அறிவித்திருந்தது. டெல்லி சீக்கியர் குருத்வாரா கமிட்டி கேட்டுக் கொண்டதன் பேரில் அந்த சமூகப் பெண்களுக்கு ஹெல் மெட் அணிவதிலிருந்து விலக்கு அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படு கிறது. இதைத் தொடர்ந்து இப்போது முஸ்லிம் பெண்களுக்கும் விலக்கு அளிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

ஆனால், இந்த இரு சமூகத்து பெண்களை எந்த அடிப்படையில் அடையாளம் காண்பது என்பது டெல்லி போலீஸுக்கு பெரிய சிக்கலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்