முக்கிய செய்திகள்:
பிரதமருக்கு சோனியா கடிதம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், "இராக்கில் கடத்தப்பட்டுள்ள இந்தியர்களை மீட்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் விரைவாக ராஜதந்திர ரீதியில் எடுக்க வேண்டும். கடத்தப்பட்டவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனை உறுதி செய்ய வேண்டும்.

நம் நாட்டு மக்களை பத்திரமாக விடுவித்துக் கொண்டுவர வேண்டிய முயற்சிகளில் அரசுக்கு காங்கிரஸ், தன்னால் ஆன ஆதரவை தர தயாராக உள்ளது.அப்பாவி மக்களை கடத்தி உள்ளது தீவிரவாதிகளின் வெறுக்கத்தக்க நடவடிக்கைகளையும் கோழைத்தனத்தையும் தான் வெளிப்படுத்துகிறது. கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர் தீவிரவாதிகளின் செயலை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது" என்று அவர் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்