முக்கிய செய்திகள்:
ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதி கைது

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் கமாண்டர் கைது செய்யப்பட்டார்.

குல்காம் மாவட்ட சிறப்பு படைப்பிரிவினரும் ராஷ்டிரீய ரைபில்ஸ் 62-வது படைப்பிரிவினரும், மத்திய ரிசர்வ் போலீஸ் 18-வது படையினரும் இணைந்து முகமது நவீத் என்ற சோட்டுவை கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த முகமது நவீத் தெற்கு காஷ்மீரில் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டு வந்ததாகவும், தேடப்பட்ட நபர்கள் பட்டியலில் இருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

பிடிபட்ட முகமது நவீதை போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் கூட்டாக விசாரித்து வருகின்றனர். தீவிர விசாரணையை துவக்கும் முன்னரே, புல்வாமா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பணியில் இருந்த 2 காவலர்களை சுட்டுக் கொன்றது, சோபியானில் காவல்துறையினர், மற்றும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்.

மேலும் செய்திகள்