முக்கிய செய்திகள்:
இராக்கில் கடத்தப்பட்ட இந்தியர்களின் இருப்பிடம் தெரிந்தது

இராக்கில் கடத்தப்பட்ட இந்தியர்கள் 40 பேரின் இருப்பிடம் தெரியவந்துள்ளது என இராக் அரசு கூறியதாக, இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.மோசூல் நகரில் இருந்து கடத்தப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த 40 கட்டுமான தொழிலாளர்கள் இருக்குமிடம் குறித்து ஈராக் அரசு அவ்வப்போது தகவல்களை கொடுத்து வருவதாக, வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சயீத் அக்பரூதீன் கூறுகையில், "இராக்கில் கடத்தப்பட்ட அனைவரும் தீவிரவாதிகளால் சிறை வைக்கப்பட்டுள்ளதாக இராக் அரசு தெரிவித்துள்ளது.

கடத்தப்பட்ட இந்தியர்கள் அனைவரும் தற்போது நலமுடன் இருக்கின்றனர், ஆனால் அவர்கள் பாதுகாப்பான சூழலில் இல்லை. இந்தியர்களை தவிர மற்ற நாடுகளை சேர்ந்தவர்களும் கடத்தப்பட்டுள்ளனர்" என்றார்.கடத்தப்பட்டவர்களின் இருப்பிடம் குறித்து அவரிடம் செய்தியாளர் ஒருவர் கேட்கையில், இது குறித்த தகவலை உடனே வெளியில் பகிர முடியாது என்று அவர் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.இராக்கில் கடத்தப்பட்ட பெரும்பான்மையானவர்கள், வட இந்தியர்கள் மற்றும் பஞ்சாப் மாநிலத்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இதுவரை, தீவிரவாதிகளிடமிருந்து எந்த வித கோரிக்கையும் பிணையத்தொகையும் முன்வைக்கப்படவில்லை என்றும், இந்தியர்களின் பாதுகாப்புக்கு எந்த வகையில் எல்லாம் நடவடிக்கை எடுக்க முடியுமோ அனைத்தையும் எடுத்துள்ளதாகவும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.இதனிடையே, இராக் தலைநகர் பாக்தாத்துக்கு இந்திய வெளியுறவுத்துறையின் சார்பில், அங்கிருக்கும் இந்திய ராணுவத்தை வலுப்படுத்த முன்னாள் தூதர் சுரேஷ் ரெட்டி மத்திய அரசு ஏற்கெனவே அனுப்பியுள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் செய்திகள்