முக்கிய செய்திகள்:
ஆளுநர்களை மாற்றுவது பழிதீர்ப்பு நடவடிக்கை : காங்கிரஸ்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஆளுநர்களை நீக்கும் முடிவு அரசியல் பழிதீர்ப்பு நடவடிக்கையே என்று காங்கிரஸ் சாடியுள்ளது.

இது போன்ற நடவடிக்கைகள் சர்வாதிகாரப் போக்கைக் காண்பிக்கிறது, இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.இது குறித்து, காங்கிரஸ் செய்தித் தொடர்புத் துறை தலைவர் அஜய் மாக்கன் கூறுகையில், “ஆளுநர்கள் அரசியல் சட்ட அதிகாரம் படைத்தவர்கள், அவர்களை பொது விவாதத்தின் கீழ் கொண்டு வரக்கூடாது, இந்திய அரசியல் சட்ட பொருத்தப்பாட்டை மத்திய அரசு உறுதி செய்வது அவசியம். மே, 2010 உச்சநீதிமன்ற உத்தரவை மத்திய அரசு அனுசரிக்கவேண்டும்” என்றார்.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் குலாம் நபி ஆசாத் கூறுகையில், ஆட்சி மாறியவுடன் ஆளுநர்களை மாற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை. மேலும் ஆளுநர்களை மாற்றுவது மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கையே காண்பிக்கிறது என்றார்.தங்களது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தாமல், மக்களின் கவனத்தைத் திசைத் திருப்ப முயற்சிக்கிறது அரசு என்றும், ஜனநாயக மரபுகளுக்கு எதிரான செயல் இதுவென்றும் அவர் மேலும் சாடினார்.

மேலும் செய்திகள்