முக்கிய செய்திகள்:
இந்தியாவில் தற்கொலை படை தீவிரவாதிகள் : தீவிரவாதி தகவல்

போலீஸ் காவலில் உள்ள ஹைதர் அலியை, தேசிய புலனாய்வு நிறுவனம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் அவன் தற்கொலைப்படை பயிற்சி அளித்த இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். கராச்சியில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா அமைப்பில் இருந்து தகவல் கிடைத்தவுடன் இந்த பதினைந்து தீவிரவாதிகளும் குறிப்பிட்ட இடத்தையோ, குறிப்பிட்ட நபரையோ தாக்குவார்கள் என விசாரணையின் போது அவன் அதிகாரிகளிடம் தெரிவித்தான். ஆனால் அந்த பதினைந்து தற்கொலைப் படையினரும் தற்போது எங்கிருக்கிறார்கள் என்ற விவரத்தை அவன் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

லஹதர் அலி சீத்தியோ காடுகயில் பல காலமாக பயிற்சி அளித்து வந்துள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், இதுவரை மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் அவனிடம் பயிற்சி பெற்றிருக்கலாம் என்றும் கூறுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் பல்வேறு ரக துப்பாக்கிகளை கையாள்வது குறித்து அவன் பயிற்சி அளித்துள்ளான். அவன் தற்கொலைப்படைக்கான ஜாக்கெட்டை பயன்படுத்துவது எப்படி என்றும் எப்படிப்பட்ட பயிற்சி அளிக்கப்பட்டது என்பதையும் அதிகாரிகளிடம் நடித்துக்காட்டினான்.

மேலும் செய்திகள்