முக்கிய செய்திகள்:
பிரதமர் மோடிக்கு பூட்டானில் உற்சாக வரவேற்ப்பு

பாரோ விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த மோடியை அந்நாட்டு பிரதமர் ஷெரிங் டோப்கே வரவேற்றார். பின்னர் அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை தரப்பட்டது. பின்னர் விமான நிலையத்தில் இருந்து திம்புவுக்கு புறப்பட்டார் மோடி. அந்நாட்டு பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் மோடி, அந்நாட்டின் உச்சநீதிமன்ற கட்டிடத்தையும் திறந்து வைக்க உள்ளார்.

முன்னதாக பூடான் நாட்டுக்கு புறப்படுவதற்கு முன் மோடி தனது டுவிட்டரில், பூடானுக்கும் இந்தியாவுக்கும் இடையே மிகச்சிறப்பான உறவு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதனால் தான் இயற்கையாகவே அந்நாட்டுக்கும் செல்ல முடிவெடுத்தேன் என மேலும் கூறியுள்ளார்.

இரு நாட்டுப் பிரதமர்களும் சந்தித்து பேசுகையில் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்