முக்கிய செய்திகள்:
லாலுவிடம் ஆதரவு : நிதீஷ் குமார் முடிவு

பீகார் மாநில முதல்வராக இருந்தவர் நிதீஷ் குமார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் பீகாரில் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.

அப்போது ஐக்கிய ஜனதா தளத்திற்கு ஆபத்து ஏற்படும சூழ்நிலை இருந்தது. இதனால் காங்கிரசும், லாலு கட்சியும் ஐக்கிய ஜனதா தளத்திற்கு ஆதரவு அளித்தது.இந்நிலையில் நாடாளுமன்றத்திற்கான மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பீகாரில் போட்டியிடும் ஐக்கிய ஜனதா தள வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கக்கோரி லாலுவிடம் நிதீஷ் குமார் ஆதரவு கேட்டுள்ளார்.பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து லாலு கட்சியை தோற்கடித்து நிதிஷ்குமார் பீகாரில் ஆட்சியைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகள்