முக்கிய செய்திகள்:
வாஜ்பாயின் எம்.ஏ. சான்றிதழ் மாயம்

89 வயதாகும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முதுமை காரணமாக உடல் நலம் குன்றி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். பா.ஜனதா கட்சியின் முதல் பிரதமர் என்ற பெருமைக்கு உரியவர்.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்த வாஜ்பாய், அங்கு விக்டோரியா கல்லூரியிலும் பின்னர் கான்பூர் டி.ஏ.வி. கல்லூரியிலும் படித்தார். அதன் பிறகு 1946–47–ம் ஆண்டுகளில் ஆக்ரா பல்கலைக்கழகத்தில் (தற்போது அம்பேத்கார் பல்கலைக் கழகம்) எம்.ஏ. அரசியல் பட்டப்படிப்பு படித்தார்.

ஆக்ரா பல்கலைக் கழகத்தில் தொடர்பு கொண்டு வாஜ்பாயின் எம்.ஏ. சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த போது அது மாயமாகிவிட்டது தெரிய வந்தது. அவர் இங்கு படித்ததற்கான ஆவணம் எதுவும் இல்லை என்று தெரிவித்து உள்ளது.

1990–ம் ஆண்டு வரை இந்த பல்கலைக்கழகம் தான் உ.பி.யில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் தாய் போன்றது. 1927–ல் தோற்றுவிக்கப்பட்டது. கான்பூர் பல்கலைக்கழகம் இதனுடன் சேர்ந்து இருந்தது. பின்னர் தனியாக பிரிந்தது. எனவே வாஜ்பாயின் எம்.ஏ. சான்றிதழ் கான்பூர் சென்று இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அங்கும் அவரது எம்.ஏ. சான்றிதழ் இல்லை.பா.ஜனதா செய்தி தொடர்பாளரும், தற்போதைய மத்திய மந்திரியுமான நிர்மலா சீதாராமன் வாஜ்பாய் பற்றி குறும்படம் எடுத்து வருகிறார். இதில் ஒரு காட்சியில் வாஜ்பாயின் எம்.ஏ. சான்றிதழ் ஓரிஜினல் பிரதியை காண்பிக்க முடிவு செய்தார். அதற்காக விண்ணப்பித்த போதுதான் அது மாயமாகி விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்