முக்கிய செய்திகள்:
உ.பி. சகோதரிகள் கொலை: சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது

உத்தரப்பிரதேச மாநிலம் பதான் அருகில் உள்ள கிராமத்தில் 2 சகோதரிகள் 7 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். அவர்களது பிணம் தூக்கில் தொங்க விடப்பட்டது. இந்த சம்பவம் உ.பி.யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல் – மந்திரி அகிலேஷ் யாதவுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

2 சகோதரிகள் கற்பழிக்கப்பட்டத்தில் போலீஸ்காரர்களும் சம்பந்தப்பட்டு இருப்பதால் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை மாநில அரசு ஏற்று சி.பி.ஐ விசாரணைக்கு சிபாரிசு செய்தது. அதன்படி டி.ஐ.ஜி தலைமையிலான 20 பேர் கொண்ட குழு பதான் சென்று விசாரணையை தொடங்கியது.

மேலும் செய்திகள்