முக்கிய செய்திகள்:
பிரதமர் நரேந்திர மோடிக்கு சீன அதிபர் ஜீ ஜின்பிங் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் இந்தியா மாபெரும் வளர்ச்சியடையும் என சீன அதிபர் ஜீ ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். சீன அதிபரின் சிறப்புத் தூதராக இந்தியா வந்த அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் வாங் யி, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார்.

சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது, சீன அதிபரின் வாழ்த்துச் செய்தியை மோடியிடம் வாங் யி தெரிவித்தார்.
இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவதன் மூலம், அமைதியான ஒத்துழைப்பு என்ற இலக்கை எட்ட முடியும் என்றும் சீன அதிபரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரையும் சீன அமைச்சர் வாங் யி சந்தித்துப் பேசினார்.

 

மேலும் செய்திகள்