முக்கிய செய்திகள்:
ஹிமாச்சல பிரதேசம் :பியல் ஆற்றின் அடித்துச் செல்லப்பட்ட 5 மாணவர்கள் உடல் மீட்பு

ஹிமாச்சல பிரதேசத்தில், ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த 5 மாணவர்களின் உடல்கள், அவர்களது சொந்த ஊரான ஹைதராபாத்திற்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டன.

சம்பவத்தில் உயிர் தப்பிய 20 மாணவர்கள், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கஜபதி ராஜூ மற்றும் பலியானவர்களின் உறவினர்களும் அந்த விமானத்தி்ல் வந்தனர்.

இதுவரை நான்கு மாணவிகள் மற்றும் ஒரு மாணவரின் உடல் மீட்கப்பட்டுள்ளன. இன்று தொடரும் மீட்புப் பணியின் போது எஞ்சிய 19 மாணவர்களின் உடல்கள் மீட்கப்படும் என அவர்களது உறவினர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கை தாமாகவே விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ள ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்றம்,

இது தொடர்பாக வரும் 16-ஆம் தேதி்க்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.
சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

நீர் மின்நிலையம் அமைந்துள்ள பியஸ் ஆற்றில் இருந்து திடீரென தண்ணீரை திறந்து விட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும் என ஹிமாச்சல பிரதேச அரசை கேட்டுக்கொண்டிருக்கிறார்.

முன்னதாக ஹிமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற ஹைதராபாத் கல்லூரி மாணவர்களில் 24 பேர், நேற்று முன்தினம் பியல் ஆற்றின் அழகை படம்பிடித்துக் கொண்டிருந்த போது அதிலிருந்து திடீரென வெளியேற்றப்பட்ட தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

மேலும் செய்திகள்