முக்கிய செய்திகள்:
சீன வெளியுறவு அமைச்சர் : மோடி, பிரணாப் முகர்ஜியுடன் இன்று சந்திப்பு

டெல்லி வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை இன்று சந்தித்துப் பேசுகிறார். பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது, இந்தியா-சீனா நாடுகளுக்கிடையேயான இரு தரப்பு நல்லுறவை வலுப்படுத்துவது குறித்தும், முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து அம்சங்கள் பற்றியும் பேசுவார்கள் என்று தெரிகிறது.


முன்னதாக, இரண்டு நாள் பயணமாக நேற்று டெல்லி வந்த வாங் யி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜூடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வர்த்தகம், முதலீடு, இரு தரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது எல்லைப் பிரச்னை, ராணுவ ஆக்கிரமிப்பு, பிரம்மபுத்திரா நதியில் அணைகளை சீனா கட்டி வருவது, சீன முதலீடுகள் அதிகரிப்பு போன்ற விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்தியாவின் வளர்ச்சியை சீனா வரவேற்பதகாவும், ஆதரிப்பதாகவும் சுஷ்மா சுவராஜிடம் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்தார். பொருளாதர உறவுகளை மேம்படுத்தி கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக இரு தலைவர்களும் பரஸ்பரம் பேச்சுவார்த்தையின் போது கூறினர்

 

மேலும் செய்திகள்