முக்கிய செய்திகள்:
கேரள சட்டசபையில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக விவாதம்

கேரள சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் வரும் 9ஆம் தேதி கூடுகிறது. அன்றைய தினமே, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சட்டப்பேரவையின் எதிர்க் கட்சி தலைவருமான அச்சுதானந்தன் இதுதொடர்பான தீர்மானத்தை கொண்டு வரவுள்ளார்.

பின்னர், அதன் மீது விவாதம் நடைபெறும் என சபாநாயகர் கார்த்திகேயன் கூறினார். இந்த விவாதத்தின் அடிப்படையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முதலமைச்சர் உம்மன் சாண்டி மேற்கொள்வார் எனவும் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாக அண்மையில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அதன் நீர்மட்டத்தை 136ல் இருந்து 142 அடியாக உயர்த்தவும் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, மறுஆய்வு மனு தாக்கல் செய்ய கேரள அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ள நிலையில், தற்போது சட்டப்பேரவையிலும் விவாதம் நடத்தவுள்ளது.

 

மேலும் செய்திகள்