முக்கிய செய்திகள்:
பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் மாத இறுதியில் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். இந்த சந்திப்பில் வெளியுறவு கொள்கையில் முன்னேற்றுத்துக்கான பேச்சு நடைபெறும் என கூறப்படுகிறது.

செப்டம்பர் மாதம் இறுதியில் மேற்கொள்ளப்படும் இந்த சந்திப்பில் முக்கியமாக இரண்டு விஷயங்கள் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.பிரதமர் நரேந்திர மோடியை பொறுத்த வரையில், இரு நாட்டுக்கும் இடையே ஆன வெளியுறவு கொள்கைள் குறித்து பேசுவார். ஒபாமாவை பொறுத்தமட்டில் இந்தியா மற்றும் அமெரிக்கா உடனான விருசல்களை கலையவும், இரு தரப்பிலும் மாறாக உள்ள அணுகுமுறையில் மாற்றம் கொண்டுவர ஒபாமா மோடியிடம் ஆலோசிப்பார் என நம்பதகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

அதே போல, இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தின் போது இரு நாட்டு தலைவர்களும் சந்தித்துப் பேச உள்ளனர்.

மேலும் செய்திகள்