முக்கிய செய்திகள்:
உம்மன்சாண்டி நாளை மோடியுடன் சந்திப்பு

நாளை 2–ந்தேதி உம்மன்சாண்டி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்.இந்த சந்திப்பின்போது அவர் கேரளாவில் நடைபெறவேண்டிய வளர்ச்சி பணிகள் பற்றி பிரதமருடன் ஆலோசனை நடத்துகிறார். மோனோ ரெயில் திட்டம், விழிஞ்சம் துறைமுகம், பாலக்காடு ரெயில் பெட்டி தொழிற்சாலை உள்பட பல்வேறு திட்டங்கள் பற்றி பிரதமரிடம் கோரிக்கை வைக்க உம்மன்சாண்டி திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் திருவனந்த புரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த உம்மன்சாண்டி கூறியதாவது:–

பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு ஒரு தலைவரை மட்டும் பொறுப்பாக்குவது சரியல்ல. வெற்றி–தோல்விக்கு கட்சியில் உள்ள அனைவருமே பொறுப்பேற்க வேண்டும். காங்கிரஸ் கட்சி மீண்டும் எழுச்சி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.காங்கிரஸ் தனது புகழை மீட்டெடுக்கும் வகையில் தற்போதைய தலைமையினால் செயல்பட இயலும். மக்களின் இதயங்களில் காங்கிரஸ் வாழ்ந்து கொண்டு வருகிறது.

1977–ம் ஆண்டு இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது அடைந்த தோல்வியில் இருந்து காங்கிரஸ் மீண்டு வந்ததை இதற்கு உதாரணமாக கூறலாம்.தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து அதை சரிசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டால் தோல்வியில் இருந்து காங்கிரஸ் தன்னை விரைவாக மீட்டுக் கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்