முக்கிய செய்திகள்:
நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் ஜூன் 4-ல் தொடக்கம்

நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த திங்கள்கிழமை பதவி ஏற்றது. இதனைத் தொடர்ந்து செவ்வாய்கிழமை நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில், கறுப்பு பணத்தை மீட்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இரண்டாவது முறையாக நேற்று (புதன் கிழமை) மீண்டும் மத்திய அமைச்சரவை கூடுவதாக இருந்தது. ஆனால், கூட்டம் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று டெல்லியில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், நாடாளுமன்றம் முதல் கூட்டத்தொடரை ஜூன் 4–ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை நடத்த முடிவெடுக்கப்பட்டது. இத்தகவலை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு உறுதி செய்தார்.

மேலும், ஜூன்-4 மற்றும் 5 தேதியில் புதிய எம்.பி.கள் பதவி ஏற்கின்றனர் என்றும் ஜூன் 6-ல் தேதி மக்களவை சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜூன் 9-ம் தேதி நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்