முக்கிய செய்திகள்:
அன்னிய முதலீட்டுக்கு அனுமதி இல்லை : நிர்மலா சீதாராமன்

டெல்லியில் இன்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர், "வெளிநாடுகளில் இருக்கும் பெருநிறுவன சில்லறை வர்த்தக அங்காடிகள் மற்றும் ஷாப்பிங் மால்கள், இந்தியாவில் திறப்பதால் இங்குள்ள விவசாயிகள் மற்றும் சில்லறை வர்த்தகத்தினர் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

பாஜக, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டு விவகாரம் தொடர்பான தன்னுடைய நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளது. பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட இது தொடர்பான வாக்குறுதியில் எந்த விதமான மாற்றமும் இல்லை.

புதிய வர்த்தகத் துறை அமைச்சகம் தற்போது நடைமுறையில் உள்ள அன்னிய முதலீடு கொள்கைகளை மறுசீரமைப்பு செய்ய முடிவெடுத்துள்ளது. இதற்காக தற்போது உள்ள நேரடி முதலீட்டு கொள்கைகள் ஆராயப்படும்.

ஏற்றுமதியை அதிகரிப்பது பாஜக தலைமையிலான அரசின் முன்னுரிமையாக இருக்கும். அனைத்து நாடுகளுடனும் ஒருங்கிணைந்து பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதே இந்த அமைச்சகத்தின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.வாக்குறுதிகளை நிறைவேற்ற அதிகாரிகளை ஒருங்கிணைத்து அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும்” என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

மேலும் செய்திகள்